விருது வழங்கும் விழாவில் அனுஷ்காவுடன் கதாநாயகனாக ஜொலித்த கோஹ்லி: வெளியான புகைப்படம்

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் மனைவி அனுஷ்காசர்மாவுடன் கோஹ்லி கலந்து கொண்டார்.

பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. . இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்ட நிலையில், சர்வதே மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் இந்த சீசன்களில் சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அவருக்கு பாலி உம்ரிகார் விருது வழங்கப்பட்டது.

அப்போது அவர் தன்னுடைய மனைவியான அனுஷ்கா சர்மாவைப் பற்றி பெருமையாக பேசினார். இந்த விருது வழங்கும் விழாவில் மனைவி அனுஷ்காவுடன் கலந்து கொண்ட கோஹ்லி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.