சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பழங்குடியின இளைஞன் கைது

14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தம்பனை பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 வயதான பருமடைந்த இந்த சிறுமி சந்தேக நபருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சிறுமி தனது பாட்டியின் வீட்டில் இருந்து இளைஞனுடன் சென்று இளைஞனின் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

தம்பனை பிரதேசத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். சிறுமியை மீட்டுள்ள பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.