யாழ்ப்பணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பேருந்தின் சாரதி ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது உடமையில் 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி நோக்கிச் சென்ற இந்த பேருந்தை இன்று மதியம் வவுனியா புதிய பேருந்து நிலையம் அருகே வழிமறித்த போதை தடுப்பு பிரிவினர், அந்த பேருந்தை சோதனை செய்த போதே இந்த கோரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சாரதியை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவரை நாளை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.