உலகமே உற்று நோக்கிய சந்திப்பில் டிரம்ப் இப்படியா உட்காருவது? விமர்சனத்திற்குள்ளாகும் புகைப்படம்

சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது டிரம்ப் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது தொடர்பான புகைப்படம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அமெரிக்கா-வடகொரியா சந்திப்பு கடந்த 12-ஆம் திகதி நடந்ததால், அந்த சந்திப்பை உலகமே உற்று நோக்கியது. இந்த சந்திப்பு எந்த வித பிரச்சனையுமின்றி சுமூகமாக முடிந்ததால், உலகில் உள்ள பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் நாற்காலியில் அமர்ந்து, மேஜையில் இருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போது டிரம்ப் நாற்காலியில் சரியாக உட்காராமல், காலை நாற்காலிக்கு சற்று வெளியில் வைத்து கையெழுத்திட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகளில் ஒருவர், டிரம்ப் ஏதோ சவாரி செய்வது போல் உட்கார்ந்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பலரும் டிரம்பின் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.