கனடாவில் பீட்சா வர தாமதமானதால், பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கனடாவின் ஓண்டேரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக தன்னுடைய 10 வயது மகனுடன் 32 வயது பெண் சென்றுள்ளார்.
அதன் பின் அங்கு பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பீட்சா வருவதற்கு மிகவும் தாமதாமானதால், ஆத்திரமடைந்த அப்பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த என்ன பிரச்சனை என்று கேட்ட போது, பெண் நடந்தவற்றை கூறியுள்ளார்.
உடனே பொலிசார் இது போன்ற சாதரண விடயங்களுக்கு எல்லாம் பொலிசை அழைக்கக் கூடாது, அவசரத் தேவைக்கு மட்டுமே பொலிசை அழைக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரு பீட்சாவுக்காக இவர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.