பிரபல தனியார் தொலைக்கட்சி நடத்திய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 1 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி எப்போது வரும் என்ற தமிழக மக்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் ஞாயிற்று கிழமை தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பிரபலங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை மும்தாஜ் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வதாக தகவல் வெளியானது . அந்த அறிவிப்புக்கு நடிகை ராய் லட்சுமி மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் நடிகை மும்தாஜ் இது குறித்து இன்னும் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால், அவர் கலந்துகொள்ளவிருப்பது உறுதி எனவும் கூறப்படுகிறது.