இந்தியாவில் மனைவி முகநூலுக்கு அடிமையானதால் ஏற்பட்ட சண்டையில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தம்பதி அனூப் (28)மற்றும் சௌமியா (23). இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மனைவி சௌமியா பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் இது தொடர்பாக கணவன் மனைவியிடயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சௌமியாவின் சகோதரர் ரவிச்சந்திராவுக்கு போன் செய்த அனூப் நடந்த விடயங்களை கூறி சௌமியாவை அவர் வீட்டுக்கே அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அனூப்பை சமாதானம் செய்த ரவிச்சந்திரன் காலையில் வந்து இது குறித்து நேரில் பேசுவதாக கூறியுள்ளார்.
பின்னர், மறுநாள் காலையில் அனூப் வீட்டுக்கு ரவிச்சந்திரன் சென்ற போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் வீட்டுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே அனூப்பும், சௌமியாவும் தனித்தனியறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.
இந்நிலையில், இருவரின் சடலத்தையும் பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.