திருமண பந்தத்தில் இணையும் போது ஜோதிடத்தின் அடிப்படையில் ராசிகள் பொருத்தம் பார்த்தால் தான் அவர்களின் வாழ்க்கை முறை சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்த பார்ப்போம்,
சிம்மம்- கன்னி
இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகமாகும்.
மீனம்- சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்துக் கொண்டால் தொடக்கத்தில் அவர்கள் காதலில் திளைத்திருப்பார்கள். ஆனால், சில நாட்களில் பிரிவு ஏற்பட்டுவிடும்.
மேஷம்- விருச்சிகம்
மேஷம் ராசி ஏமாற்றும் குணம் கொண்ட ராசி. விருச்சிகம் பொறாமைப்படும் ராசி. இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால் இருவருக்கு இடையே விரிசல் ஏற்படும்.
ரிஷபம்- கும்பம்
ரிஷபம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளும் பொருந்தாத ராசிகள். ரிஷப ராசி பொதுவாக காதல், அன்பு, அழகு, பொறுமை ஆகிய பண்புகளையும், கும்ப ராசி எதிர்பாராத விடயங்களை செய்யும் பண்பை கொண்டிருப்பதால், இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்துப்போகாது.
சிம்மம்- ரிஷபம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும், உடல் மற்றும் மனதளவில் ஒரே மாதிரியான நிலையை எதிர்பார்ப்பதால், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி மனப்பான்மை, நாளடைவில் பிரிவிற்கு காரணமாக அமையும்.
மிதுனம்- கடகம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்பு செலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது.
தனுசு- மகரம்
இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.
கன்னி- மிதுனம்
கன்னி மற்றும் மிதுன ராசியில் திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும். மிதுனம் அன்பே போதும் என்று நினைக்கும். ஆனால் கன்னி ராசி சேமிப்பு அவசியம் என்பதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
மிதுனம்- விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் இருவருமே எந்த ஒரு விடயத்தையும் மனதிற்குள்ளயே வைத்துக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக் கொள்ளாததால் பிரச்சனைகள் ஏற்படும்.
கும்பம்- கடகம்
இவர்கள் இருவருக்கும் மத்தியில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கும். அதுவே இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும். ஆனால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தால் வாழ்க்கையை சிறப்பாக மாற்றலாம்.
துலாம்- மீனம்
இந்த ராசிக்காரர் இருவர்களுக்கும் இடையே உண்டாகும் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
மேஷம்- கடகம்
இந்த ராசிக்காரர்கள் இருவருக்கும் எண்ணங்கள் ஒத்துப்போனாலும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறையுடன் நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால் இவர்களின் வாழ்வில் விரிசல் உண்டாகும்.