சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிவுற்று இன்று காலை 10.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு கொண்ண்டு இருக்கிறது..
குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகி இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
வழக்கின் முக்கிய தீர்ப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பானது, “பயங்கரவாத குற்றவியல் அமைப்பு” இல்லை எனவும், இந்த அமைப்புக்காக சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் “பலாத்தகாரமாக நிதி சேகரித்தது” நிரூபிக்கப்பட்டு உள்ளது எனவும், அதனால் குற்றவாளிள் இனங்காணப் பட்டுள்ளனர் எனவும்…
இதன் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 பேரில் சிலருக்கு சுவிட்சர்லாந்தில் 5 வருடம் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரப்பட்டு இருந்த நிலையில்,தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளுக்கு பதினெட்டு மாதங்கள் முதல், ஆறரை வருட சிறைத்தணடனையும் வழங்கப்பட்டு உள்ளது..
விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்ததுடன், கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து.
குலம, அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.
யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய மூவரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்து விடுவித்து இழப்பீடும் வழங்கியது. என புலிகளின் தரப்பினரால் தெரிவிக்கப் படுகிறது.