“ஷாருக் கான் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் ஜீரோ பட டீசர்!

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜூரோ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக் கான், கத்ரினா கயிஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகும் இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ளது. இயக்குநர் ஆனந்த் எல். ராய் – தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ், ரான்ஜானா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் 3 அடி உயரம் உள்ளவராக ஷாருக் கான் நடிக்கிறார். வித்தியாசமான வேடத்தில் ஷாருக் கான் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் சல்மான் கான், இந்த டீசரில் இடம்பெற்றுள்ளார்.