யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் தீப்பிடித்ததால் மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
நேற்று இரவு, குறித்த கல்வி நிறுவனத்திற்குள் உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டுள்ளது.
இதேவேளை இந்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிறுவனமே தற்போது தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.