குதிரை தூக்கி வீசியதில் இளவரசர் பலி!

இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தின் போது குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார்.

ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜோர்ஜ். 41 வயதான இவர் இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து 2015-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.

அப்போது வேகமாக சென்ற குதிரை திடீரென்று துள்ளிக் குதித்ததினால் இளவரசர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஜெர்மன் அரச குடும்பம் தெரிவித்துள்ளது.