ஊதுபத்தியால் எரிந்து நாசமாய் போன புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் – வீடியோ..

ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி வழிபட முடிவு செய்து காரின் முன் ஊதுபத்தியை வைத்துள்ளார்.

சீனா உள்ளிட்ட புத்த வழிபாடு உள்ள சில நாடுகளில் ஊதுபத்திகள் பெரிதான ஒன்றாக இருக்கும். காரின் முன் ஊதுபத்தியை வைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அங்குள்ள நான்கு சிறுவர்கள் ஊதுபத்தியை கொளுத்தியுள்ளனர். திடீரென அணல் கங்குகள் காரின் மீது விழ, யாரும் எதிர்பாராத வகையில் கார் தீப்பிடிக்க தொடங்கியது.

என்ன நடக்கிறது என அனைவரும் உணர்வதற்கு உள்ளாகவே கார் நன்றாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் கிண்டலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.