ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை?

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல்மாட்ரிட் அணிக்காக ஆடுவதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ அந்த நாட்டு அரசுக்கு சரியாக வருமான வரி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது வரிஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் ரொனால்டோ, வருமானவரித்துறையுடன் சமரச தீர்வு கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் அவர் சம்மதம் தெரிவித்து இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.