பௌத்த மதத்திற்கும் சிங்கள மாணவர்களின் பல்கலைக்கழக கல்விற்கும் வடக்கில் எவ்விதமான சுதந்திரமும் இல்லை என தெரிவித்த மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திவன்கும்புரே ஸ்ரீ விமலதர்ம தேரர் , தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கண்டிக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு சென்று ஆசிப்பெற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் இடம்பெற்ற சந்திப்பின் போதே மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திவன்கும்புரே ஸ்ரீ விமலதர்ம தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில் ,
யாழ்பாணத்திற்கு சென்று விகாரை ஒன்று அமைக்க முடியவில்லை. அங்கு புத்தர் சிலை வைக்க முடியவில்லை. சிங்கள மாணவர்களுக்கு யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்க முடியாதளவிற்கு அங்குள்ளவர்கள் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுக்கின்றனர். இவை குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
எனவே தான் இடம்பெரும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வி பாடதிட்டத்தில் பௌத்தம், இலக்கியம் மற்றும் வரலாறு போன்ற பாடங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாக அறியகிடைத்துள்ளது. இவற்றை தட்டிகேட்க வேண்டும் என தெரிவித்தார்.