பார்வையாளர்கள் வரவேற்புடன் பிக்பாஸ் செட்டுக்குள் நுழையும் கமல்ஹாசன்..! வைரலாகும் வீடியோ

விஜய் டிவி நடத்தும் பிரபலங்கள் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகம் இன்று தொடங்கவுள்ளநிலையில் கமல்ஹாசன், அவர் பிக்பாஸ் செட்டுக்குள் நடந்துவரும் வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன்

விஜய் டிவியில் கடந்த ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில், பங்கேற்ற பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நூறு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை மக்களும் விடாமல் பார்த்தனர். அதற்கு முக்கிய காரணம், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது, இந்த ஆண்டு பிக்பாஸின் 2-ம் பாகம் இன்று தொடங்குகிறது.

அதில், பங்கேற்கும் பிரபலங்கள் யார் என்பதை நெட்டீசன்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இந்தநிலையில், கமல்ஹாசன், அவர் பிக்பாஸ் செட்டுக்குள் நடந்து வரும் வீடியோ காட்சியை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல்ஹாசனுக்கு பார்வையாளர்கள் மிகுந்த வரவேற்பை அளிக்கின்றனர். அந்த வீடியோ தற்போது, இணையத்தில் வைரலாகிவருகிறது.