கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை பொருளாதார மாநாடு!

2018 ஆம் ஆண்டின் இலங்கை பொருளாதார மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 12, 13 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார மாநாட்டை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.