யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று கொடிகாமம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின்போது, புகையிரதத்தில் பயணித்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த கடற்படைச் சிப்பாய் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.