அம்மா மகள் இருவரையும் ஒரே நேரத்தில்அடக்கம் செய்த மக்கள்!

வேலூர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணம்மா என்பவருக்கு கோவிந்தம்மாள் என்கிற மகள் இருக்கிறார். இவரது மகளும் மருமகன் பூபதியும் சேர்ந்து பீடி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் கோவிந்தம்மாள் கோமா நிலைக்கு சென்றிருக்கிறார்.

மருத்துவமனையில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு போக சொல்லிவிடவே அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ள நிலையில் கோவிந்தம்மாள் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

கோவிந்தம்மாள் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் அவரது அம்மா கண்ணம்மாவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டு அங்கேயே உயிர் இழந்து விட்டார். அம்மா மகள் இருவரையும் அவரது உறவினரும் பொது மக்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சோகமயமாக இருக்கிறது.