கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருக்கும் பொலிஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண்ணின் கணவர் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், தனியார் கம்பெனியில் நான் பணியாற்ற வருகிறேன், கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் போது எனது வீட்டின் மாடியில் காவல் ஆய்வாளர் விதுன்குமார் என்பவர் வசித்து வந்தார். ஆரம்பத்தில் என்னுடன் நண்பர் போல பழகி வந்த அவர், ஓராண்டிற்கு பிறகு எனது மனைவியுடன் பழகி தகாத உறவு வைத்துள்ளார்.
இதனை அறிந்து நான், இருவரையும் கண்டித்தேன். ஆனால் என்னிடம் சில தவறாக புகைப்படங்களை காட்டி என்னை மிரட்டினார். மேலும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக கூறுகிறார்.
இதுபோன்று பல பெண்களின் குடும்பத்தை சீர்குலைத்துள்ளார். இனிமேலும் பொறுக்க முடியாது, எனது குடும்பத்தின் நலன் கருதி இந்த புகாரை அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.