தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பொய்யான தகவலை பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான கருத்தை அவர் மக்களிடம் பரப்பி உள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.