திருக்கோவிலூரை சேர்ந்த பவித்ரா எனும் மாணவி தாய் தந்தையரை இழந்தவர். இவர் திருக்கோவிலூர் அருகே உள்ள கூடலூர் செம்மண்டலத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்து வருகிறார்.
உறவினர்களின் உதவியால் இரண்டு ஆண்டுகளாக இங்கிருந்தபடியே படித்து வந்திருக்கிறார். கோடை விடுமுறைக்கு திருக்கோவிலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் விடுமுறை முடிந்ததும் அரசு சேவை இல்லத்திற்கு திரும்பி ப்ளஸ் ஒன வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.
சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்ட பவித்ரா யாருடனும் சரியாக பேசாமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை பவித்ராவை காணாமல் அவர்கள் தோழிகள் தேடியதில் சேவை இல்லத்தின் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறினர்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் பவித்ராவின் சடலத்தை கைப்பற்றினர். பவித்ரா இறந்ததற்கான காரணம் எதுவும் தெரியாததால் உறவினர் நண்பர்கள் தொடக்கி சேவை இல்லம் வரை காவல்துறை விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.