நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியான டாக்சின் இருந்தால் உணவு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.
ஒவ்வொருவருக்கும் இதன் அறிகுறிகள் வேறுபடும். பொதுவாக வாந்தி, தலைவலி, வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை ஏற்படும். இதனை கவனிக்காமல் விடக்கூடாது.
பொதுவாக இது போன்று பாதிக்கப்பட்டு அடிக்கடி வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு செல்வதால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறைந்திடும். இதனை ஈடுகட்ட வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி சார்ந்த பிரச்சனை ஏற்பட்டாலும் இஞ்சி சாறு எடுத்து குடிக்கலாம். இதில் அதிகளவு இனிப்பு சேர்க்காதீர்கள் தேவையென்றால் ஒரு ஸ்பூன் தேன் மட்டும் கலந்து கொள்ளலாம்.
உணவு சாப்பிடுவதற்கு முன்னதாக ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்து விடவும். இது குடித்த அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிடலாம்.
சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை கலந்து குடிக்கலாம். இதில் இனிப்பு எதுவும் சேர்க்க வேண்டாம். இது செரிமானத்திற்கு உதவுவதுடன் க்ளீன் செய்யவும் உதவிடும்.
ஃபுட் பாய்சன் போன்ற நேரங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.
டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்திடுங்கள் க்ரீன் டீ, ஹெர்பல் டீ போன்றவை குடிக்கலாம். வியர்வை அதிகமாக வெளியேறக்கூடிய மாதிரியான வேலைகளை தவிர்த்திடுங்கள்.