பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் குறித்து தந்தை வில்லியம் வெளியிட்ட அரிய தகவல்

பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரும் புத்தகப்புழுக்கள் என தந்தை வில்லியம் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய எழுத்தாளரான Antonia Fraser என்பவருக்கு சமீபத்தில் சிறப்பு மிக்க Order of the Companion விருது வழங்கப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இளவரசர் வில்லியம், தமது இரு பிள்ளைகளும் புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் எனவும், அதில் குட்டி இளவரசி சார்லட் ஒரு புத்தகப்புழு எனவும் அவர் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

ஒரு தந்தையாக அது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் செயல் என குறிப்பிட்ட அவர், தமது சிறு வயதில் தந்தை சார்லசிடம் இருந்து வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக பல முறை கடிந்து கொள்ளப்பட்டதையும் நினைவு கூற்ந்தார்.