இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி!

இலங்கையில் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நாளுக்கு நாள் வாகனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன பயன்பாட்டினை கட்டுப்படுத்த வாகன விலையை அதிகரிக்குமாறு உலக வங்கியினால் நிதி அமைச்சிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, உலக வங்கியின் கோரிக்கையினால் இலங்கையில் வாகன விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1000 CC என்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் நிதி அமைச்சில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.