பதவிகளுக்கு பதிலாக 50 கோடி ரூபா பணம் கோரும் ஐ.தே.க உறுப்பினர்கள்

பதவிகளுக்கு பதிலாக 50 கோடி ரூபா பணம் வழங்குமாறு ஐக்கிய சேதியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.

பதவிகளுக்காக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 50 கோடி ரூபா பணம் வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான கடிதமொன்றை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க உள்ளனர்.

நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளும் கட்சிக் கூட்டத்தில் இந்த யோசனைத் திட்டம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த எட்டு பேரும் அமைச்சு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை நிராகரித்துள்ளனர்.

30 கோடி ரூபா நிதியும், அமைச்சு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் வழங்குவதற்கு கட்சி மறுசீரமைப்பு கூட்டத்தின் போது பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த பரிந்துரையை பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.