இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் இராட்சத விமானம்!

அமெரிக்க விமானப்படையின் சி-130 இராட்சத விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம், அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின் நிபுணர்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கையின் மேலடுக்கு வளிமண்டலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே, நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின் நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்.

குறித்த விமானம் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அத்துடன், இந்த விமானத்தில் சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேலடுக்கு வளிமண்டலத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை விஞ்ஞானிகளுடன் இணைந்து. அமெரிக்க நிபுணர்கள், 10 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.