வீதி போக்குவரத்து சட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கால எல்லை 14 நாட்களில் இருந்து 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட மற்றும் வாகனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.
அஞ்சல் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக தண்டப்பணத்தை தபால் அலுவலகங்களில் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மோட்டார் வாகன தவறுகள் தொடர்பிலான தண்டப்பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.