மகனின் திருமண அழைப்பிதழை தங்கத்தில் செதுக்கிய அம்பானி!

முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியும், பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகளுமான ஸ்லோகா மேத்தாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களின் நிச்சயதார்த்தம் வரும் 30-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த 13-ஆம் திகதி அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி கல்யாணத்திற்கு பிரத்யேகமாக வடிவமைத்துள்ள திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது அவர் திருமண அழைப்பிதழை வெளியே எடுத்த போது அனைவரும் வாயை பிளந்தனர்.

ஏனெனில் அந்த அழைப்பிதழின் உள்ளே விநாயகர் சிலையும், அதன் உள்ளே இருக்கும் பெட்டியை திறக்கும் போது கோவிலில் கேட்பது போல மணியோசையும் கேட்டுள்ளது.

அதன் மேல் விலையுர்ந்த சில கற்களும் பொருத்தப்பட்டுள்ளன. திருமண அழைப்பிதழை திறந்தால் மணமக்களின் பெயரில் முதல் எழுத்து தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஓரத்தில் வரும் டிசைன்களும் தங்கத்தினால் செதுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே மினி கோவில் போன்று தோற்றம் அளிக்கும் இந்த பத்திரிக்கை ஒன்றின் விலை 1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.