தமிழகத்தில் சென்னை-சேலம் பசுமைவழிச் சாலைக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
நடிகர் மன்சூர் அலிகான், சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.
அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.
அதன் பின்னர், ’சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் மக்களால் வாழ முடியாது. அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக் கூடாது.
இதற்காக போராட்டம் நடைபெற்றால் அதில் கண்டிப்பாக கலந்துகொள்வேன். எட்டு வழிச்சாலை அமைந்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்’ என அவர் ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை வந்த சேலம் பொலிசார், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மன்சூர் அலிகானை கைது செய்தனர்.