போர்த்துகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ரசிகனான சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. போர்த்துகல்-ஸ்பெயின் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் ரொனால்டோ மூன்று கோல்கள் அடித்து அசத்தினார்.
இதன்மூலம், ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக, போர்த்துகல் அணி வீரர்களின் பேருந்து ஒன்று விமான நிலையம் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது.
அப்போது அங்கிருந்த ரொனால்டோவின் ரசிகனான சிறுவன் ஒருவன், தனது ஹீரோ ரொனால்டோவை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த காவலாளியிடம் கூறி அழுதான்.
சிறுவனின் அழுகுரலைக் கேட்டு பேருந்தில் இருந்து வந்த ரொனால்டோ, சிறுவனை கட்டியணைத்து முத்தமிட்டார். மேலும் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், அவனது t-shirtயில் கையொப்பமிட்டார்.
இதனால் சிறுவன் மிகவும் நெகிழ்ந்து போனான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.