கொய்யா இலைகளில் விட்டமின் C, B மற்றும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்க்கக் கூடிய ஆற்றல் அதிகம் உள்ளதால் புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலைகள் – 1 கைப்பிடி அளவு
- தண்ணீர் – 1 லிட்டர்
தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, அதில் கொய்யா இலைகளை போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
முதலில் தலைமுடியை ஷாம்பு கொண்டு நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். தலைமுடி காய்ந்ததும், இந்த கொய்யா இலை தண்ணீரை தலைமுடியில் தடவி, தலையை நன்றாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்யும் போது முடியின் வேர்க்கால்களில் அதிகம் செய்து 2 மணிநேரம் அப்படியே தலையில் விட்டு பின் மிதமான சூடுள்ள நீரில் முடியை கழுவ வேண்டும்.
எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும்?
முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், இம்முறையை ஒரு வாரத்தில் 3 முறைகள் செய்ய வேண்டும். அதுவே முடி நன்றாக வளர்ச்சி உள்ளவர்கள் என்றால், வாரத்தில் 2 முறைகள் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- கொய்யா இலையில் உள்ள விட்டமின் C முடியை வேகமாக வளர செய்வதுடன், அடர்த்தியாக்க உதவுகிறது.
- கொய்யா இலையின் சாறு உடைந்த முடிகளை சரி செய்து வலிமையாக்க உதவுகிறது.
- கொய்யா இலையின் சாறை தலைமுடியில் தடவுவதால், அது சூரிய கதிர்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- கொய்யா இலையின் சாறை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து, முடி உதிர்வதை தடுத்து, புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.
குறிப்பு
கொய்யா இலையின் நீரை அறை வெப்ப நிலையில் இருக்கும் போது மட்டுமே தலையில் தடவ வேண்டும்.