நித்யா மேனன் இந்தியாவின் முன்னணி திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாக உலா வருகிறார். தமிழ் மலையாளம் தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிஸி யாக நடித்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் .
இவர் பெங்களூரை சேர்ந்தவர், இவரது பெற்றோர் பிறப்பிலே மலையாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர் . அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.
இவர் இரண்டுக்கும் மேற்பட்ட பிலிம் பிலிம்ஃபேர் விருதுகள், மற்றும் பல விருது நிகழ்சிகளில் முன்னணி நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் .இவர் தமிழில் 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். மேலும் பல வட இந்திய படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார் .
இவர் தெலுங்கில் அவி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அப்போது நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் பிரபல நடிகரும் மான நானி கலந்து கொண்டார்.
அப்போது இது குறித்து நித்யா மேனன் பேசும் போது கூறியதாவது நானியை புகழ்வதோடு அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான் என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார்.
பொதுவாக மேடையில் பேச சங்கடப்படும் நித்யாமேனன் நிகழ்ச்சியில் ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்ததுள்ளார்.இது நிகழ்ச்சியிலிருந்த அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.