மகாராஷ்ட்ராவை ஆளும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் கையாலாகத்தனத்தின் மற்றுமொரு கொடூர விளைவு….!
“விவசாயிகள் தற்கொலை” என்ற அச்சுறுத்தலை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டுவரும் மகாராஷ்டிராவின்….மனதைப் பதறவைக்கும் சமீபத்திய உதாரணம்…!
இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கார்பரேட் கடன்களை தள்ளுபடி செய்யத் தெரிந்த பாஜகவின் மத்திய மோடி அரசுக்கும் மாநிலத்தை ஆளும் பட்னாவிஸ் அரசுக்கும்….வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் தாக்குதல்களாலும் அரசுகளின் மோசமான கொள்கைகளாலும் கடனில் முழ்கி பரிதவித்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகளின் சில ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மனம் வரவில்லை என்பது, இவர்கள் யாருடைய நலனுக்கு பாடுபடுபவர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக்குகிறது…
கார்பரேட்டுகளுக்கான “அச்சே தின்”னை தேடித்தேடி அலைந்து கண்டறிந்து பரிசளித்து, அவர்களின் எச்சில் இலைக்காக அலையும் நீங்கள், இந்த எளிய மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்…!
விவசாயிகள் மரணத்தை கண்டுகொள்ளாதா அரசு, மனித சமூகத்திற்கு முற்றிலும் பகையானது மக்களின் பசியும்,தலைமுறையின் கோவமும்
முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் பார்ப்பனியத்தின் காவிகளை வெளுக்கும் …
வரலாற்றில் நடக்கும்.