வெறுங்கையுடன் வந்தவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனது எப்படி? உண்மைக் கதை!!

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக வெறுங்கையுடன் கொல்கத்தா வந்த சுராஜ்மல் ஜலான்(78) இன்று இந்தியாவின் மூன்றாவது பெரிய பேனா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.இவரது நிறுவனம், ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் பேனாக்கள் உற்பத்தி செய்து 50 நாடுகளுக்கு அனுப்புகிறது.இன்று நாற்பதாவது ஆண்டைக் கொண்டாடும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய்கள் ஆகும்.ஆரம்பகட்ட வாழ்க்கை:1938-ல் ராஜஸ்தானில் உள்ள லச்மான் கார் என்ற கிராமத்தில் ஏழ்மையான ஆறு குழந்தைகள் நிறைந்த குடும்பத்தில் சுராஜ்மலின் ஐந்தாவதாக பிறந்தார்.

அவரது தந்தை ஓய்வுபெற்றதால் சுராஜின் அண்ணன்கள் வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.பள்ளிப்படிப்பை முடித்தபின் 18 கிமீ தூரத்தில் இருந்த ஒரு கல்லூரியில் படிக்கச் சேர்ந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் படித்தார்.கல்லூரிக்குப் போய்வரும் செலவைக் கூட வீட்டினரால் ஏற்கச் சிரமப்படும் அளவுக்கு வறுமை இருந்தது. ஆனால் எவ்வலவு இன்னல்கள் வந்தாலும் அங்கேயே படிக்க விரும்பினார் சுராஜ்.

தன் வாழ்க்கை தன் கையில்:

1957-ல் கொல்கத்தாவில் வேலை பார்த்த தன் கிராமத்து இளைஞர்கள் மூலம் அங்கு சென்று வேலை தேட முடிவு செய்து வீட்டில் அனுமதி கேட்டார் சுராஜ்.ஆனால், அவர்கள் மறுத்தனர். ஆயினும் தன் வாழ்க்கை தன் கையில் என சுராஜ் கொல்கத்தா கிளம்பிவிட்டார். ரயிலில் டிக்கெட் வாங்க மட்டும் காசு இருந்தது.கொல்கத்தா வந்ததும் அங்கு ஒரு கார்ப்பெட் ஷோரூமில் 60 ரூ சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் கூறுகையில் ‘விற்பனை கணக்கு எழுதுதல் பொதுவான வேலைகள் எனக்குத் தரப்பட்டன. நண்பர் ஒருவரின் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் தங்கிக்கொண்டேன்.சாலையோரத்தில் குளியல், சின்ன கடைகளில் சாப்பாடு, கையில் காசு இல்லையென்பதால் தினமும் பல கிமீ நடந்தே வேலைக்குச் செல்வேன். அந்த நாட்கள் மிகவும் கடினமானவை. குடும்பத்தை நினைத்துக் கண்ணீர்விடுவேன்” என்று நினைவுகூர்கிறார்.

திருமணம் ஆகி சில ஆண்டுகள் கழிந்த பின்னர் சிலிகுரியில் ஒரு நிறுவனத்தில் துணை மேலாளராக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.இந்த சமயத்தில் ஊரில் அப்பா அம்மாவுக்கு வயதாகிவிட்டது என்பதால் ஊருக்கே திரும்புமாறு அழுத்தம் கொடுத்தார்கள். எனவே சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டேன்” என்கிறார் சுராஜ்.

பத்தாயிரம் ரூபாயில் உதயமான LINC நிறுவனம்:

ஐயாயிரம் ரூபாய்க்கு பேனாக்கள் வாங்கி ஒவ்வொரு வீடாக சென்று பேனாக்களை விற்கத் தொடங்கினார்.தரமான பேனாவை இல்லை என்பதை உணர்ந்த சுராஜ், சொந்தமாக தொழிற்சாலை அமைக்க எண்ணி கொல்கத்தாவுக்கே மீண்டும் வந்தார். ஊரில் இருக்கும் வீட்டுக்கு வீடு போய் பேனா விற்கும் தொழிலைச் செய்யும் போது சுராஜ்க்கு தெரிந்தது.

மனைவி குடும்பத்தினரின் உதவியுடன் பத்துக்கு பத்து அடி அறையில் பத்தாயிரம் ரூபாய் முதலீடாக போட்டு பால் பேனா செய்யத் தேவையான ப்ளாஸ்டிக் பாகங்கள் செய்யத் தொடங்கினார்.’லிங்க் என்றால் தொடர்புகொள்ளுதல் என்ற ஆங்கில வார்த்தை, நண்பர் ஒருவர் சொன்னது. அதிலிருந்துதான்  LINC பெயரை நிறுவனத்துக்கு வைத்தோம்’ என்கிறார் சுராஜ்.

என் தயாரிப்புகள் பிரபலம் ஆயின. ஆனால் சொந்தமாக ஒரு பிராண்ட் உருவாக்க விரும்பினேன்” என்கிற சுராஜ் 1976-ல் லிங்க் பென் அண் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனத்தை 700 சதுர அடி வாடகை இடத்தில் 3 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். ஐந்து பேர் வேலை செய்தனர். மாத வாடகை 700 ரூபாய்.

பேனாக்களை வெளியே செய்யகொடுத்து, வாடிக்கையாளர்களின் மதிப்பை பெற்று தொழில் வளர்ந்தது. 1.5 கோடி அளவுக்கு விற்பனை இருந்தபோது அவரது 17 வயதான மகன் தீபக் ஜலான் 1980ல் நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தார்.

வெளிநாடுகளுக்கு விரிவடைந்த தொழில் சாம்ராஜ்யம்:
சுராஜின் மகன் தீபக் விற்பனையாளராக பொறுப்பேற்ற பின்னர், 1992-ல் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு யுனி பால் பேனாக்களின் வினியோகத்தை தொடங்கினர்.

சர்வதேச அளவில் தங்கள் பேனாவைக் கொண்டுபோக விரும்பியதால் பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் முதல் தயாரிப்பு வசதியை 1986ல் உருவாக்கினார்கள். அதே ஆண்டு தென் கொரியாவுக்கு 12 லட்சரூபாய் மதிப்பில் பேனாக்கள் முதன்முதலில் ஏற்றுமதி செய்தார்கள்.1995ல் இவர்களின் ஆண்டு விற்பனை 25 கோடி ஆனது. மும்பை, கொல்கத்தா பங்குச்சந்தையிலும் நிறுவனம் பதிவு ஆனது.

2000-2001 நிதியாண்டில் விற்பனை 52 கோடியாக அதிகரித்தது. 2005-ல் லிங்க் கிளைசரை அறிமுகம் செய்தனர். லிங்க் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சில்லரை விற்பனைக் கடைகளும் அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டது.இப்போது கிழக்கு இந்தியா, மும்பை பகுதிகளில் லிங்க் 13 சில்லரைக் கடைகளை வைத்து இருக்கிறது. ஜெல் பேனாக்கள், பால்பேனாக்கள், பௌண்டைன் பேனாக்கள், மார்க்கர்கள், பைல்கள் உள்ளிட்ட 50 சொந்தமாக தயாரிக்கும் பொருட்களை இங்கு விற்கிறார்கள்.2008-ல் லிங்க் ஷாருக் கானை தங்கள் பிராண்ட் தூதராக நியமனம் செய்தனர்.

15 கோடி முதலீட்டில் 33,000 சதுர அடியில் தங்கள் இரண்டாவது தயாரிப்பு தொழிற்சாலையைத் தொடங்கினார்கள். தீபக் தன் மகன் ரோஹித் உடன் இணைந்து நிறுவனத்தின் விற்பனையை அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆக்க திட்டம் தீட்டுகிறார்.சுராஜ் ஜலான் தன் பெயரை இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவங்களின் வரிசையில் எழுதி உள்ளார். அவரது அடுத்த தலைமுறை இந்த வெற்றிக்கதையைத் தொடர்கின்றது.