சுவையான தோசை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
வெந்தயம் – 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
மிளகு – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டிதாளிப்பதற்கு:

சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் – 3
கடுகு – 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டுசெய்முறை:

* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.

* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.

* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.

* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து 10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.

* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.

* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பொருட்களை தாளித்து எடுக்கவும்.

* தாளித்ததையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.

* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )

* தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.