முடி கொட்டுதா? கற்றாழை இருக்க பயமேன்???

தூசி, காலநிலை மாற்றம், மாசு காரணமாக பாதிப்படையும் கூந்தலை பராமரிக்க கற்றாழை பெருமளவில் பயன்படுகிறது.

கற்றாழை ஜெல் நமது கூந்தலுக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதன் மூலம், கூந்தல் பட்டு போன்று மென்மையாக மாறி விடும்.

கூந்தல் உதிர்வை குறைத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க கற்றாழை பெருமளவில் பயன்படும்.

கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றையும் போக்குகிறது.

அதேபோல் கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்குவதுடன், ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

கற்றாழை ஜெல்லில் புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே, கற்றாழை ஜெல் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்து கிடைக்கிறது.