வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலையில் ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது
இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது
குறித்த பாடசாலையில் தரம் 6ற்குள் கல்வி பயிலும் 11 மாணவர்கள் உள்ளனர். குறித்த மாணவர்களுக்கு அரசினால் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையிலேயே சமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது
இதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலையில் சமையல் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அங்கு அழுகிய நிலையில் இருந்த கிழங்குகள் ,வெங்காயம், பழுதடைந்த அரிசி போன்ற சமையல் பொருட்கள் காணப்பட்டுள்ளன.