அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சமைத்த கோழிக்கறியின் மீது 24 கரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
அத்தோடு, வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறி போல பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர்.
அந்தவகையில் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை இலங்கை மதிப்பில் சுமார் 7000 ரூபாய். இருப்பினும், தங்க கோழிக்கறியை சாப்பிட வாடிக்கையாளர்கள் கூட்டம் குவிகின்றனராம்.