கணவன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட பிரபல முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் தேஜஸ்வினி (25) இவர் பவன் குமார் என்பவரை காதலித்து 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார்.
முதலில் பெற்றோர் எதிர்த்ததால் வெளிநாடு சென்ற இத்தம்பதி அவர்கள் சம்மதித்த பின் சொந்த ஊருக்கு திரும்பினார். பவன் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்கு இடையில் பிரச்சனை நடைபெற்று வந்திருக்கிறது. பவன்குமார் தகாத உறவில் இருப்பதாக சந்தேகப்பட்ட தேஜஸ்வினி அவர் ஊரில் இல்லாத நேரத்தில் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை தேஜஸ்வினியின் சடலத்தோடு ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில் பவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னை மன ரீதியாக பவன் சித்ரவதை செய்ததையும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார் தேஜஸ்வினி.
இது பற்றிய விசாரணை தொடர்கிறது.