ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி திருடிவிட்டார்! பொது மேடையில் உடைத்த அதிமுக அமைச்சர்

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி மூலம் பெற்றுக் கொண்டு 18 எம்.எல்.ஏக்களும் ஊர் சுற்றியதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அந்நிகழ்ச்சியின் போது ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு அல்லது ஸ்டாலின் மூலம் பெற்றுக் கொண்டு மைசூர், அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு ஊர் சுற்றியதாகவும், உங்களால் தானே ஜெயலலிதா சிறைக்கு போனார்கள் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.