இந்தியாவில் மனைவிக்கு தாடியிருப்பதாகவும், அவருக்கு ஆண் குரல் உள்ளதாகவும் கூறி கணவர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அஹமதாபாத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒருவர், மனைவியின் குடும்பத்தாரால் நான் ஏமாற்றப்பட்டதாகவும், திருமணத்திற்கு முன்பு தன் மனைவிக்கு தாடி, ஆண் குரல் போன்றவை இருந்துள்ளது.
எங்கள் கலாச்சாரப் படி பெண்ணின் முகத்தை மறைத்து அதாவது முக்காடு இட்டு தான் திருமணம் செய்வோம்.
இதனால் நான் அவரின் முகத்தை பார்க்கவில்லை எனவும் தற்போது நான் முழுவதுமாக ஏமாற்றப்பட்டுள்ளதால், எனக்கு விவாகரத்து வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மனைவி தரப்பு கூறுகையில், ஹார்மோன் குறைபாட்டால் முகத்தில் சிறிது தாடி வளர்ந்திருப்பதாகவும், அதைச் சிகிச்சை மூலம் அகற்றி விடலாம், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி, விவாகரத்துப் பெறுவதற்கு தன் கணவன் தவறான காரணங்களை சொல்வதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து மனைவியின்-தரப்பு வழக்கறிஞர் பதில் மனு சமர்ப்பித்த பின்பு, வழக்கு தொடுத்த நபர் நீதிமன்றத்திற்கு வராததால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.