வெறும் கேம் ஷோ, முதுகில் குத்தாதீர்கள்! – கோபமாக பேசிய பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்

சென்ற வருடம் நடந்தப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம். அவர் அந்த நிகழ்ச்சியால் கடும் எதிர்ப்பை தான் சந்தித்தார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தற்போது இரண்டாவது சீசனில் நடக்கும் விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். போட்டியாளர்களை பற்றி வரும் விமர்சனங்களை பற்றியும் அவர் கோபமாக பதிவிட்டுள்ளார்.

சினிமா துறையில் இருப்பவர்களே மற்ற பிக்பாஸில் பங்கேற்றுள்ள சினிமா நடிகர்களை பற்றி இப்படி கேவலமாக பேசலாமா என அவர் கேட்டுள்ளார். இது வெறும் கேம் ஷோ என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.