பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணத்தை மட்டுமல்ல ரஷ்யா பெண்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரச கணக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அலோசியஸிடம் சிலர் பணத்தை பெற்றுள்ளனர். சிலர் வீடுகளை பெற்றுள்ளனர். மேலும் சிலர் ரஷ்ய அழகிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அர்ஜூன் அலோசியஸிடம் தான் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்தும் சத்தியக்கடிதம் ஒன்றையும் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.