இந்த டீயை ஒரு கப் குடிங்க: அப்பறம் பாருங்க…..

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை செம்பருத்தி பூவிற்கு உள்ளது.

தினமும் செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகிவந்தால் ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகளை தருகின்றது.

செம்பருத்தி டீயை பருகிவதனால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது, இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.
  • சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
  • செம்பருத்தி டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
  • ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகுவதால், காய்ச்சலை அதிகரிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
  • செம்பருத்தி டீயைக் கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்வதால் அல்லது இதனை உட்கொள்வதால், உடலில் உள்ள அணுக்கள் விரைந்து தூய்மைப்படுத்தப்படுகின்றன.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம்.
  • கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன, இதனால் கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது.