சமீப காலங்களாக உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் குறிப்பாக டயட் பின்பற்றுபவர்கள் மத்தியில் சோயா, சோயா பால் குறித்த பயன்பாடு அதிகளவு இருக்கிறது.
பொதுவாக ப்ரோட்டீன் அசைவ உணவுகளில் தான் நிரம்பியிருக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ப்ரோட்டீன் சத்து கிடைப்பது மிகச் சில உணவுகளிலிருந்து தான் அவற்றில் ஒன்று இந்த சோயா.
சோயாவிலிருந்து தயாரிக்கப்படுகிற எந்த வகை உணவை நீங்கள் உட்கொண்டாலும் நிறைவான உணர்வைத் தரும் ஏனென்றால் இவற்றில் ஃபைபர் இருக்கிறது.
இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்கிறது. குறிப்பாக செல்களின் செயல்பாடுகளுக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் இவை முக்கியப் பங்காற்றுகிறது.
மெனோபாஸ் காலங்களில் ஏற்படுகிற பிரச்சனைகளின் தீவிரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சோயாவில் இருக்கும் இசோஃபேலவோன்ஸ் உதவுகிறது.
அதனால் மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடியவர்கள் சோயாபீன்ஸ் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் அதிகப்படியான விட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இவை இரண்டுமே கர்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமாகும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது.
ஆனால் தொடர்ந்து அதிகப்படியான சோயா அல்லது சோயா சார்ந்த பொருட்கள் எடுத்து வந்தால் அது உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இது மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகிய பாதிப்புகளை உண்டாக்கி விடும். அதைத் தவிர இது தைராய்டு சுரப்பியின் வேலையையும் சீர்குலைத்திடும்.