நீங்கள் ஹிட்லருக்கு ஒப்பானவர், இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியேனும் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம், மகாசங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற தானம் அளிப்பு நிகழ்வொன்றின்போது அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வேடருவே ஸ்ரீ உபாலி தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நீங்கள் ஹிட்லருக்கு ஒப்பானவர், எனவே ஹிட்லராக மாறியேனும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற இதுவே மகாசங்கத்தினராகிய எமது இறுதியான ஞாபகமூட்டலாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டு செல்ல வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.