கொழும்பு – முகத்துவாரம் ஸ்ரீ சுவர்ணாம்பிகா சமேத ஸ்ரீமத் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வருடாபிஷேகத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட பூஜை நிகழவுகளும் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நேற்றைய தினம் ஸ்ரீமத் அருணாசலேஸ்வரர் தேரில் வெளிவீதியுலா வந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாளித்ததுடன், இந்த நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், 9 நாட்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் இந்த திருவிழாவானது இன்று தீர்த்த உற்சவத்துடன் நிறையவடைய உள்ளது.