நோயாளியின் இறப்பை கணிக்கும் கூகுள்!

நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை 95% துல்லியமாகக் கூறும் செயற்கை நுண்ணறிவு செயல்முறையை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்து தொழில்நுட்ப உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் பயன்படும் வகையில் ஒரு கண்டுபிடிப்பை உருவாகியுள்ளது.

கூகுளின் இந்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை மருத்துவமனையில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவர் உயிர் பிழைப்பாரா என்பதை 95% துல்லியமாகக் கணித்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதற்கான கருவியை தற்போது கூகுள் சோதித்து வருகிறது. எதிர்காலத்தில் இது மிகச்சரியாக கணிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தோல் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியுள்ளார்கள்.