பிளாஸ்டிக் உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால், நடிகை ஸ்ருதி ஹாசன் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றார். தமிழ் தெலுங்கு இந்தி என்று பன் மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் கவர்ச்சிக்கு என்றுமே நோ சொன்னது இல்லை, அம்மனி அந்த அளவிற்கு ஓபன் டைப்.

sruthi

2000 ஆம் ஆண்டு வெளியான கமல் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகியோர் நடித்த ‘ஹேராம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் ‘3, பூஜை, சிங்கம்-3 ,புலி, வேதாளம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகியான பின்னர் கவர்ச்சிய காண்பிக்க எந்த வித தடையும் விதிக்காத ஸ்ருதி ஹாசனுக்கு, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பும் வந்து கொணடே இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான இவரது படங்கள் ஏதும் பெயர் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கைவசமில்லாததால் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடவும் ஆயுத்தமாகியுள்ளார்.

shruti-haasan_

actress-sruthi

Actress-Shruti-Hassan

பட வாய்ப்புகள் இல்லததால் தங்களது ரசிகர்களுக்காக அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்று நடந்தது.அதில் பிளாஸ்டிக்கால் ஆன உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.